கோலாலம்பூர், 20/02/2025 : வெள்ளப் பேரிடரால் அடிக்கடி பாதிக்கப்படும் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட, 12 மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டங்கள் அனைத்தையும், குறைந்த செலவில் உடனடியாகச் செயல்படுத்துவதற்கான தகுந்த அணுகுமுறைகளை நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, ஜே.பி.எஸ் பரிசீலித்து வருவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
”திட்ட நிறைவு காலத்தை விரைவுப்படுத்தும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும் பரிந்துரைகளில் ஒன்றாகும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன், திட்டமிடப்பட்ட நிறைவு காலத்தைவிட 12 மாதங்களுக்கு முன்னதாகவே திட்டத்தை விரைவுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் அவர்.
வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவிற்கு இணங்க அமைச்சின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கோலா நெருஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அலியாஸ் ரசாக் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ ஃபடில்லா அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#DatukSeriFadillahYusof
#FloodPreventionProjects
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.