கோலாலம்பூர், 19/02/2025 : தனிநபர் அடிப்படை உரிமையுடன் நாட்டின் பாதுகாப்பின் அவசியத்தை சமநிலைப்படுத்த 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம் மேம்படுத்தப்படுகிறது.
அதோடு, நாட்டின் பாதுகாப்பிற்கும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மோசமான, சிக்கலான மற்றும் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கையாள்வதில் சொஸ்மா ஆக்கப்பூர்வமாக இருப்பதை உறுதிசெய்யவும் அச்சட்டம் மேம்படுத்தப்படுகிறது.
எனவே, சொஸ்மாவை மேம்படுத்த உள்துறை அமைச்சு மூன்று இலக்குகளையும் கொண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் மற்றும் ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்களின் பட்டியல் அல்லது அட்டவணையை, வழக்கிற்கு ஏற்ப, நீதிமன்றத்தின் இணக்கத்தின் படி அரசாங்கம் திருத்தும் என்று சைஃபுடின் விவரித்தார்.
“இச்சட்டத்தின் கீழ் 73 குற்றங்கள் உள்ளன. இனி அவற்றை மறுபரிசீலனை செய்து பார்ப்போம். குறிப்பாக எந்தெந்த குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாதவை, எந்தெந்த குற்றங்களுக்கு ஜாமீன் வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றம் கொண்டிருக்கிறது என்பதை கண்காணிப்போம். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமில்லை,” என்றார் அவர்.
இன்று மக்களவையில் நடைபெற்ற சொஸ்மா தொடர்பான அமைச்சரின் தகவல் வழங்கும் அங்கத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
Source : Bernama
#HomeMinister
#DatukSeriSaifuddinNasutionIsmail
#SOSMA
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews