சௌ கிட்டில் அதிரடி சோதனை; 24 சட்டவிரோத குடியேறிகள் கைது

சௌ கிட்டில் அதிரடி சோதனை; 24 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர், 19/02/2025 : மலேசியக் குடிநுழைத்துறையின் கோலாலம்பூர் படையினர் இன்று பின்னிரவு சௌ கிட், ஜாலான் ஹாஜி ஹுசேனில் உள்ள 14 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில்  24 சட்டவிரோத குடியேறிகளை கைதாகினர்.

அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு இடையூறை ஏற்படுத்திய சட்டவிரோத குடியேற்றவாசிகளின் ஊடுருவல் தொடர்பில் பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, பின்னிரவு மணி ஒன்று தொடங்கி மூன்று மணி வரை இந்நடவடிக்கை தொடர்ந்து.

கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகளில் 84 இந்தோனேசியர்கள், 17 வங்காளதேச ஆடவர்கள், 14 பாகிஸ்தானியர்கள், நான்கு நேபாளத்தினரோடு இந்தியா மற்றும் மியன்மார் நாடுகளில் இருந்து முறையே முன்று மற்றும் இரு நபர்கள் கைதானதாக கோலாலம்பூர் குடிநுழைத்துறை இயக்குநர்  வான் முஹமட் சௌப்பி வான் யூசோஃப் தெரிவித்தார்.

ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய அசுத்தமான சூழ்நிலைகளிலும், நெரிசலிலும் அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

அவர்களில், பெரும்பாலானோர் சௌ கிட் சுற்றுவட்டாரத்தில் வேலை செய்வதுடன் அப்பகுதியைச் சுற்றி 800 முதல் 2,200 ரிங்கிட்வரையிலான வாடகை வீட்டில்  23 பேர் வரை தங்கியியுள்ளதாக  வான் முஹமட் சௌப்பி வான் யூசோஃப்  கூறினார்.

“அக்கட்டடம் மிகவும் மோசமான நிலையில் அழுக்காகவும் குப்பைகள் நிறைந்தும் காணப்பட்டது. இது பொது சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடும்,” என்றார் அவர்.
SUPER: வான் முஹமட் சௌப்பி வான் யூசோஃப் / கோலாலம்பூர் JIM  இய்க்குநர்

அந்த அடுக்குமாடியின் ஒவ்வொரு மாடியிலும் மூன்று முதல் ஐந்து அறைகள் கொண்டபத்து வீடுகள் வரை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Source : Bernama

#IllegalImmigrants
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.