அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் செலவை அரசாங்கம் இறுதி செய்துள்ளது

அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் செலவை அரசாங்கம் இறுதி செய்துள்ளது

கோலாலம்பூர், 19/02/2025 : வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனெசியாவைச் சேர்ந்த அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான செலவை அரசாங்கம் இறுதிசெய்துள்ளது.

வங்காளதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை போன்ற பிற நாடுகளுடன் மேல் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனிதவள துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட் தெரிவித்தார்.

“(அந்நிய தொழிலாளர்களை) அனுப்பும் நாட்டிற்கும் தருவிக்கும் நாட்டிற்கும் இடையில் ஒரு கூட்டு உறுதிப்பாடாக இச்செலவு நிர்ணயிக்கப்படுகிறது. அதேவேளையில், தருவிப்பதற்கான செலவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்ய பெறும் நாடு மட்டுமின்றி அனுப்பும் நாட்டிலும், சம்பந்தப்பட்ட தரப்புக்கான கண்காணிப்புடன் தருவிக்கும் நடவடிக்கையும் வலுப்படுத்தப்பட வேண்டும்,” என்றார் அவர்.

இன்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின்போது அப்துல் ரஹ்மான் அவ்வாறு குறிப்பிட்டார்.

அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் செயல்முறையை எளிதாக்கவும், அதற்கானச் செலவைக் குறைக்கவும் அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து மீரி நாடாளுமன்ற உறுப்பினர் சியூவ் சூன் மேன் முன்னதாக கேள்வி எழுப்பினார்.

மேலும், நாட்டில் திறன்மிக்க அந்நிய தொழிலாளர்கள் நீண்ட காலத்திற்கு குறிப்பாக சரவாக்கில் பணிபுரிய அமைச்சு அனுமதிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Source : Bernama

#HumanResourceMinister
#DatukSeriAbdulRahmanMohamad
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.