சுபாங் ஜெயாவில் வீட்டில் தீ; தாயும் மகனும் பாதுகாப்பாக மீட்பு

சுபாங் ஜெயாவில் வீட்டில் தீ; தாயும் மகனும் பாதுகாப்பாக மீட்பு

சுபாங் ஜெயா, 19/02/2025 : இன்று காலை சுபாங் ஜெயா, ஜாலான் எஸ்எஸ்  19-இல் உள்ள வீட்டில் ஒரு தாயும் மகனும் தீச்சம்பவத்தில் சிக்கி அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்ட அவ்விருவரும், வீட்டின் மேல் தளத்தில் சிக்கிக் கொண்ட வேளையில்,
சுமார் ஐந்து நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையினரால் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை JBPM-இன் சிலாங்கூர் மாநில செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த இரட்டை மாடி வீட்டில் தீப்பற்றியது குறித்து காலை மணி 9.15-க்கு தீயணைப்பு மீட்புப் படையினர் அவசர அழைப்பு கிடைத்ததாக ஓர் அறிக்கையில்  அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து எண்மர் அடங்கிய படையினர் இரண்டு தீயணைப்புப்  வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மீட்கப்பட்ட 42 வயது பெண்மணியும் அவரின் 13 வயது மகனும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர்கள் சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவிடம் அனுப்பப்பட்டனர்.

Source : Bernama

#SubangJaya
#FireAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.