லங்காவியில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11% அதிகரிப்பு

லங்காவியில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11% அதிகரிப்பு

கோலாலம்பூர், 18/02/2025 : 2022ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை, லங்காவியில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 115 பேராக அல்லது 11 விழுக்காடு அதிகரித்தது.

இதன்வழி, சுற்றுலா வருமானமும் 240 கோடி ரிங்கிட் அல்லது 34.9 விழுக்காடாக உயர்வுக் கண்டுள்ளது.

அண்மையத் தரவுகளின் படி, வரி விலக்குகள் காரணமாக லங்காவி தீவுக்கு விலக்களிப்பட்ட வருமான இழப்பு அல்லது வரி இழப்பு, 2022ஆம் ஆண்டு தொடங்கி 22 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் அல்லது 59.7 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வரி விலக்கு பட்டியலில் வரும் பொருட்களுக்கான கூடுதல் திட்டங்கள் நாட்டின் வருமானத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இன்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட மக்களவைக்கான எழுத்துப்பூர்வ பதிலில் நிதி அமைச்சு தெரிவித்தது.

லங்காவியில் வரி இல்லாத நிலை மீட்சிபெற்றால், அரசாங்கத்திற்கான ஆண்டு வருமான இழப்பு குறித்து பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்மான் நசாருடின் எழுப்பிய கேள்விக்கு இந்த பதில் முன் வைக்கப்பட்டது.

Source : Bernama

#Langkawai
#Tourism
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews