கிள்ளான், 18/02/2025 : பேராங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சந்தேக நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு பூலாவ் கெத்தாமிற்குச் தப்பிச் செல்வதற்கு முன்னதாக மேலும் ஐந்துக் குற்றங்களைப் புரிந்தது தெரிய வந்துள்ளது.
இம்மாதம் பிப்ரவரி எட்டாம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு, ‘Ah Boy’ என்று அழைக்கப்படும் அச்சந்தேக நபர் முதலில் நாட்டின் தெற்கு பகுதிக்கு தப்பிச் சென்று பின்னர் சிலாங்கூருக்கு திரும்பியதாக அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், மலாக்காவிற்கு தப்பிச் சென்ற அந்நபர் ஐந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்ததாக அவர் கூறினார்.
அதன் பின்னர், சிலாங்கூர் பந்திங்கிற்கு திரும்பிய அவர், இரண்டு நாட்களுக்கு முன்னர் சபாக் பெர்னாமில் காணப்பட்டார்.
“கிள்ளானில் இருந்து கிராப் வாகனத்தில் ஏறிய அவர், தம்மை மலாக்காவில் இறக்கிவிடும்படி ஓட்டுநரை மிரட்டியுள்ளார். மலாக்காவிலும் அந்நபர் அதே செயல்முறையைப் பயன்படுத்தியுள்ளார். சிட்டி பேரங்காடி சம்பவத்திற்குப் பிறகு, ஐந்து குற்றங்களைச் செய்துள்ளார். அதில் வழிப்பறி கொள்ளை, வீடு புகுந்து திருடுவது மற்றும் வாகன திருட்டு ஆகியவையும் அடங்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி குற்றச்செயல்களைப் புரிந்து வரும் அச்சந்தேக நபர், வழிப்பறி கொள்ளை குற்றங்களுக்காக இரு முறை சிறை வைக்கப்பட்டிருந்ததாக இன்று பூலாவ் கெத்தாம் ஜெத்தியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.
Source : Bernama
#SetiaAlam
#ShootOut
#PDRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews