தெலுக் இந்தான், 18/02/2025 : கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வரை மொத்தம் 24,700 பேர் e-invois செயல் முறையைப் பயன்படுத்தி 17 கோடியே 30 லட்சம் ரிங்கிட் வரி செலுத்தியுள்ளனர்.
அதில், இரண்டாம் கட்ட வரி செலுத்துவோரில் 11, 600-க்கும் மேற்பட்டோர் e-invois முறையைப் பயன்படுத்திய வேளையில் மூன்றாம் கட்டத்தில் 7, 700 பேர் தன்னார்வ முறையில் பதிவு செய்துள்ளதாக துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் கூறினார்.
“நாட்டின் நலன் மற்றும் செழிப்புக்கு உகந்த அளவில் வரி கசிவைக் குறைப்பதில் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது,” என்றார் அவர்.
பேராக், தெலுக் இந்தானில், இன்று நடைபெற்ற உள்நாட்டு வருமான வரி வாரியம் LHDN-இன், கோபுர திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரயாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா அந்த கோபுரத்தை திறந்து வைத்தார்.
Source : Bernama
#DeputyFinanceMinister
#LimHuiYing
#EInvois
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews