ஜாலான் ஸ்டேசன் சென்ட்ரல், 17/02/2025 : அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவிக்கு தாம் நியமிக்கப்படவில்லை என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவிற்கான மலேசியத் தூதராக பணியாற்றிய டத்தோ ஶ்ரீ முஹமட் நஸ்ரி அப்துல் அசிசின் ஈராண்டு பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அப்பதவிவை வகிக்கவிருக்கும் நபரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமே விட்டுவிடுவதாக தெங்கு சஃப்ருல் கூறினார்.
“சரி, இரண்டாவது கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன், அது பதிலளிக்க மிகவும் எளிதாக இருக்கும். உண்மையில் இல்லை என்பதுதான் அதற்குப் பதில். உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிக்கவும். ஆனால் ஒரு முக்கிய குறிப்பில், அது யாராக இருந்தாலும் மித்தி ஆதரிக்கத் தயாராக உள்ளது. எங்களுக்குக் களத்தில் யாராவது தேவை”, என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசியா சீன மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதனிடையே, அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவிக்கு, நூருல் இஸ்ஸா, தெங்கு சஃப்ருல் உட்பட ஐவரின் பெயர்களைப் பரிசீலிக்க, பாங்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங், கடந்த வாரம் முன்மொழிந்திருந்தார்.
Source : Bernama
#TengkuZafrul
#USAMalaysianEmbassy
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews