பேங்காக், 17/02/2025 : தாய்லாந்து-மியன்மார் எல்லைகள் உட்பட கம்போடியா மற்றும் லாவோசின் பல பகுதிகளில் நிகழும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக ஆசியான் நாடுகள் அச்சம் கொண்டிருப்பதை தாம் அறிவதாக தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ரா தெரிவித்திருக்கிறார்.
மேலும், கிரிப்டோ எனப்படும் இலக்கவியல் கட்டண முறையை பயன்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்க ஆசியானுக்கு தாம் பரிந்துரைக்கவிருப்பதாக 75 வயதுடைய தக்சின் கூறுகிறார்.
”நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், அது தாய்லாந்து மற்றும் ஆசியான் மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் ஆபத்து. ஆனால், அவர்கள் அனைத்து இடங்களிலும் மோசடி செய்கின்றனர். கடந்த ஆண்டும் கூட மோசடியை மேற்கொண்டனர். சிங்கப்பூரிலும் மேற்கொண்டனர். எனவே, அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து மூட வேண்டும். மியன்மார் மற்றும் மோசடி மையங்களைக் கொண்ட இதர நாடுகளுக்கு ஒவ்வொருவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்,” என்றார் அவர்.
அண்மையில் பேங்காகில் நடைபெற்ற, பெர்னாமா தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சூன்வை உடனான சிறப்பு நேர்காணலின் போது தக்சின் ஷினவத்ரா அத்தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அண்மையில், மியன்மாரின் ஷ்வே கொக்கோ நகரில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை தடை செய்யும் படி தாய்லாந்தின் பிரதமரும் தக்சினின் மகளுமான பேடோங்டார்ன் உத்தரவிட்டார்.
அங்கு ஆயிரக்கணக்கானோர் மனித கடத்தலுக்கு ஆளாகும் நிலையில், உலக நாடுகளை குறி வைத்து இணைய மோசடிகளை மேற்கொள்ள அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
Source : Bernama
#MalaysiaThailand
#CrytoCurrency
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews