உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க ஆசியான் நாடுகளுக்கு மலேசியா அழைப்பு

உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க ஆசியான் நாடுகளுக்கு மலேசியா அழைப்பு

ஜாலான் ஸ்டேசன் சென்ட்ரல், 17/02/2025 :  துணிச்சலான நடவடிக்கை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தி உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசியான் நாடுகளுக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.

ஆசியானின் வியூக வளர்ச்சிக்காக, சீனாவுடன் ஆழமான பொருளாதார ஒத்துழைப்பை மலேசியா வலியுறுத்துவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“ஆசியானின் தருணம் இப்போது. அனைவருக்கும் வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு நாம் விரைவாகவும், ஒற்றுமை மற்றும் லட்சியத்துடனும் செயல்பட வேண்டும். இது குறுகிய கால சிந்தனைக்கான நேரம் அல்ல. மாறாகத் துணிச்சலான முடிவுகள், மாற்றத்தக்கக் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் நீண்டகால வளமைக்கு ஏற்புடைய அர்ப்பணிப்புக்கான நேரமிது”, என்று அவர் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசியா சீன மாநாட்டில் உரையாற்றுகையில் அன்வார் அவ்வாறு கூறினார்.

பல ஆண்டுகளாக ஆசியானின் மிக முக்கியமான பொருளாதார பங்காளியாக சீனா இருந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Source : Bernama

#PMAnwar
#ASEAN
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews