ஈப்போ , 17/02/2025 : இம்மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் பருவமழை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான வழிகாட்டுதல்களை, நாடு முழுவதுமுள்ள பள்ளி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும்.
வெப்பமான காலத்தின் போது, கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களை, அது அடிப்படையாகக் கொண்டிருப்பதாக, கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ கூறினார்.
”அதே சமயத்தில் மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் வெப்பநிலை குறித்த தகவல்களை அவ்வப்போது கே.பி.எம், ஜே.பி.என் மற்றும் பள்ளி நிர்வாகம் கண்காணிக்கும்.மேலும், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கும்,” என்றார் அவர்.
இன்று, 2025 / 2026-ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணையின் முதல் நாளை முன்னிட்டு, பேராக், ஈப்போ, கம்போங் சிமியில் உள்ள சுங் தக் சீனப் பள்ளியை பார்வையிட்ட பின்னர் வோங் அவ்வாறு கூறினார்.
Source : Bernama
#ClimaticChanges
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews