செமினி, 17/02/2025 : அட்டவணையைப் பின்பற்றாமல், புதிய பள்ளியை நிர்மாணிப்பதில் ஏற்படும் தாமதத்தை, கல்வி அமைச்சு கடுமையாக கருதுகிறது.
ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதுடன், அதனை பின்தங்கிய திட்டமாக வகைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க, கடுமையான கண்காணிப்புகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக, அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
”குறிப்பாக, வேலை செயல்முறை மற்றும் பணி ஒழுக்கம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதை உறுதிச் செய்யும். குறிப்பாக, பள்ளிகளை நிர்மாணிப்பதற்காக முன்னதாகவே வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மடானி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு உண்மையில் மிகப் பெரியது. முந்தைய திட்டங்களைப் பார்க்கும்போது நிறைய திட்டங்கள் முடிக்கப்படவில்லை. எனவே, புதிய அர்ப்பணிப்புடன் நாங்கள் பொறுப்பேற்கின்றோம். மேலும், பள்ளியைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க புதிய அணுகுமுறைகள் பின்பற்றப்படும்,” என்றார் அவர்.
இதனிடையே, புதிய பள்ளியைக் கட்டுவதில் ஏற்படும் தாமதத்தினால், கல்வி முறையிலும் சமூகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதை அவர் சுட்டிக்காட்டினார்.
Source : Bernama
#MalaysianEducationMinistry
#SchoolBuildings
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews