கோலாலம்பூர், 16/02/2025 : பி-ஹெய்லிங் ரஹ்மா இணையச் சேவை திட்டம், அதன் தொடர்புடையக் குழுவினருக்கு முழுமையான பலனை வழங்கும் விதமாக மறு ஆய்வு செய்யப்படும்.
அதன் தொடர்பான பலவீனத்தையும் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் ஆராய சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து தங்கள் தரப்பு அது தொடர்பான பகுப்பாய்வைப் பெறவிருப்பதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
”அக்காலகட்டத்தில், நாங்கள் கடந்தாண்டில் மேற்கொண்டோம். டெல்கோ மற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம். ஆனால், சில நேரங்களில் தகவல்கள் பொருட்கள் அனுப்பும் சேவையைச் செய்பவர்களைச் சென்றடைவதில்லை. அதுதான் எனக்குத் தெரிய வந்தது. எனவே, வருங்காலத்தில் அதுபோன்ற அமலாக்கத்தை நாங்கள் மறுஆய்வு செய்வோம். அதற்கு காரணம், பொருட்கள் அனுப்பும் சேவையைச் செய்பவர்களுக்கு அதற்கான பலன் கிடைப்பதில்லை. நிறுவனத்திற்கு உதவுவது எங்களின் எண்ணமில்லை. மாறாக, பொருட்கள் அனுப்பும் சேவையைச் செய்பவர்களுக்கே ஆகும்,” என்றார் அவர்.
இன்று நடைபெற்ற லெம்பா பந்தாய் Pantai இளைஞர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஃபஹ்மி அவ்வாறு குறிப்பிட்டார்.
பி-ஹெய்லிங் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான இணைய சேவையை, 33 ரிங்கிடில் வழங்கும் பி-ஹெய்லிங் ரஹ்மா திட்டத்தை கடந்தாண்டு ஜனவரி மாதம், தொடர்பு அமைச்சின் வழி, அரசாங்கம் தொடக்கி வைத்தது.
Source : Bernama
#FahmiFadzil
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews