நாட்டின் பாதுகாப்பு & பொது அமைதிக்கு முன்னுரிமை வழங்கும் அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்

நாட்டின் பாதுகாப்பு & பொது அமைதிக்கு முன்னுரிமை வழங்கும் அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்

ஜார்ஜ்டவுன், 15/02/2025 : தனி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு முன்னுரிமை வழங்கும் அம்சங்களுக்கு, 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம், சொஸ்மா தொடர்பாக அமைச்சர் தாக்கல் செய்யவிருக்கும் அறிக்கையில் கவனம் செலுத்தப்படும்.

சொஸ்மா சட்டம், குறிப்பாக அச்சட்டத்தில் உள்ள பல பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் தயாராக இருந்தாலும், திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் தீவிர வன்முறைக்கு எதிராக அதைப் பயன்படுத்துவதற்கு நியாயம் உள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சனிக்கிழமை, பினாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டப் பின்னர், சைஃபுடின் நசுத்தியோன் செய்தியாளர்களிடம் பேசினார்.

சொஸ்மாவில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை ஆராய்வது உட்பட அதன் பயன்பாட்டின் அடுத்த கட்டம் குறித்து, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சொஸ்மாவை மதிப்பீடு செய்து அதை மாற்றியமைக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Source : Bernama

#SOSMA
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews