குவாந்தான், 15/02/2025 : கடந்த வியாழக்கிழமை, பகாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட, உணவு வியாபாரம் செய்யும் பெண்ணின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர், விசாரணைக்கு உதவும் பொருட்டு, இன்று தொடங்கி ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணை மேற்கொள்ள, 53 வயதான அவ்வாடவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நோர் இசாதி சகாரியா, அத்தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
இன்று அதிகாலை மணி 5.30 அளவில், கோலா திரெங்கானு, வாகாவ் தெம்பெசு கோங் பாடாக் குடியிருப்பு பகுதியில், அச்சந்தேக நபரைப் போலீஸ் கைது செய்ததாக, குவாந்தான் மாநில போலீஸ் தலைவர் ஏசிபி வான் முஹமட் சஹாரி வான் புசு கூறினார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு ஆவணங்கள் மட்டுமின்றி மோதிரம், ரொக்கப் பணம் மற்றும் உடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண்ணின் தலையில் கடினமான பொருளைக் கொண்டு தாக்கி, நீரில் மூழ்கடிக்கப்பட்டதால், அவர் மரணமடைந்திருப்பது பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக, பெர்னாமா தொடர்பு கொண்டபோது குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைர் ஏசிபி வான் முஹமட் சஹாரி வான் புசு கூறினார்.
மேலும், உயிரிழந்தவரின் மரணம் குறித்து எவ்வித ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
Source : Bernama
#PDRM
#Kuantan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews