சாலையைப் பயன்படுத்துவோர் அவசரத் தடத்தைச் சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம்

சாலையைப் பயன்படுத்துவோர் அவசரத் தடத்தைச் சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம்

கோலா பிலா, 15/02/2025 :   சாலையைப் பயன்படுத்துபவர்கள், அவசரத் தடத்தை சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம் நினைவுறுத்தியுள்ளது.

மரண விபத்துக்களைத் தடுக்க அவசரத் தடத்தைக் கடக்கும்போது சாலையைப் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகள் கவனமாக இருக்குமாறு எல்.எல்.எம் தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹருண் தெரிவித்தார்.

“நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை மோட்டார் சைக்கிளோட்டிகள் மோதி மரண விபத்துக்கள் ஏற்படுவது குறித்து நான் தினமும் தகவல்களைப் பெறுகிறேன். எனவே, நான் எவ்வாறு என்று அடையாளம் காண முயற்சிக்கிறேன். தற்போது அவசர தடத்தை மோட்டார் சைக்கிளோட்டிகள் தங்களுக்கான சிறப்பு தடமாக எண்ணி விடுகின்றனர். அவசரத் தடம் தங்களுக்கான சிறப்பு தடம் அல்ல என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும். பழுது ஏற்பட்டால் அனைத்து வாகனங்களும் பயன்படுத்தும் தடம். எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்”, என்று அவர் கூறினார்.

இன்று, கம்போங் தெருசான் செபிராங்கில், Satu Pemimpin Satu Kampung நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சசாலி அவ்வாறு தெரிவித்தார்.

Smart Lane எனப்படும் விவேகப் பாதை இருப்பதால், மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் அது குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அவர், நெடுஞ்சாலையில் அவசரத் தடத்தைப் புரிந்து பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Source : Bernama

#DatukIrSazaliHarun
#SmartLane
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews