காணாமல் போன இரு சகோதரர்களைத் தேடுவதற்கு, பொதுமக்களின் உதவியை நாடியது போலீஸ்

காணாமல் போன இரு சகோதரர்களைத் தேடுவதற்கு, பொதுமக்களின் உதவியை நாடியது போலீஸ்

கோலாலம்பூர், 15/02/2025 :  கடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து காணாமல் போன இரண்டு சகோதரர்களைத் தேடும் நடவடிக்கைக்குப் போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, நேற்று அதிகாலை மணி 2.48 அளவில் தங்கள் தரப்பிற்குப் புகார் கிடைத்ததாக, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரொன் அப்துல் யூசோப், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

15 வயதான நூர் ஷஃபிகா எல்லியானா முஹமட் ரிசுவான் செபஸ்டியான் மற்றும் அவரது சகோதரரான 10 வயதான முஹமட் அடாம் மிக்ஹெயில் முஹமட் ரிசுவான் செபஸ்டியான் ஆகிய இருவரும் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக கூறப்படுவதற்கு முன்னர், அவ்விருவரும், சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள தாமான் ஹர்மோனி 5 இருக்கும் தங்கள் வீட்டில் இருந்ததாக, ஏசிபி நஸ்ரோன் கூறினார்.

காணாமல் போன அவ்விரு சகோதரர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கலாம் அல்லது காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குத் திரையில் காணும் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

Source : Bernama

#PDRM
#MissingBrothers
#Selangor
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews