கடந்தாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு

கடந்தாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு

கோலாலம்பூர், 14/02/2025 : 2024-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு ஒட்டுமொத்தமாக 2.7 விழுக்காடு உயர்ந்தது.

ஆசியாவில் அமெரிக்க நாணயத்திற்கு எதிராக உயர்ந்த சில நாணயங்களில் ரிங்கிட்டும் ஒன்றாகும்.

2024-ஆம் ஆண்டு முழுவதும் சிங்கப்பூர் டாலர், கொரிய வான் மற்றும் ஜப்பானிய யென் உள்ளிட்ட பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது.

மலேசியாவின் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு எதிராக அதன் மதிப்பு 7.5 விழுக்காடு அதிகரித்ததாக பேங்க் நெகரா மலேசியா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் விரிவான வட்டார நாணய இயக்கங்களுக்கு ஏற்ப அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் மதிப்பு குறைந்தாலும் ஒட்டுமொத்தத்தில் அது அதிகரித்துள்ளது.

2025-ஆம் ஆண்டில் அமெரிக்க கொள்கை விகிதக் குறைப்பு குறித்த நிதிச் சந்தை எதிர்பார்ப்புகளை மறுமதிப்பீடு செய்ததைத் தொடர்ந்து இந்த இயக்கம் முதன்மையாக வலுவான அமெரிக்க டாலரால் இயக்கப்பட்டது.

Source : Bernama

#USDRM
#DollarsRinggits
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews