தஞ்சோங் காராங், 15/02/2025 : தோட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பின் வழியாக தொழிலாளர்களுக்கு வீட்டுவசதியை மேம்படுத்தி கொடுப்பதில், Harmoni MADANI Bestari Jaya மக்கள் வீடமைப்பு திட்டம் மாதிரியாக விளங்க வேண்டும்.
தோட்ட நிர்வாகம் நிலம் வழங்கும் பட்சத்தில், அதில் அரசாங்கம் வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்வதின் வழி இந்த ஒத்துழைப்பு சாத்தியமாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“சகோதரர் கோர் மிங்கிற்கு நன்றி. அவர் உண்மையிலேயே முயற்சி எடுத்தார். எத்தனை அமைச்சர்கள் மாறினார்கள். ஆனால் திட்டத்தை முடிக்கவில்லை. ஆனால் அவர் தோட்டம். நகராட்சி, அமைச்சு ஆகிய தரப்புகளிடம் கேட்டறிந்து, அதை அமைச்சரவைக்குக் கொண்டு வந்தார். என்னிடம் கேட்டார், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த விவகாரத்தை முடித்தோம்”, என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை, Harmoni MADANI Bestari Jaya மக்கள் வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அன்வார் அவ்வாறு உரையாற்றினார்.
மக்கள் நலன் தொடர்புடைய திட்டங்களுக்கான ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துவதன் மூலம் ஊராட்சி அதிகாரிகளும் பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Source : Bernama
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews