துரித பான பாக்கெட்டுகளில் விற்கப்பட்ட 32 லட்சம் ரிங்கிட் போதைப் பொருள் ஜோகூர் பாருவில் பறிமுதல்

துரித பான பாக்கெட்டுகளில் விற்கப்பட்ட 32 லட்சம் ரிங்கிட் போதைப் பொருள் ஜோகூர் பாருவில் பறிமுதல்

ஜோகூர் பாரு, 14/02/2025 : கடந்த பிப்ரவரி 6 மற்றும் 7 தேதிகளில் ஜோகூர் போலீசார் மேற்கொண்ட சிறப்பு  சோதனையில் துரித பான பாக்கெட்டுகளில் போதைப் பொருளை விநியோகிக்கும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

சுமார் 32 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பல்வேறு வகையிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மூவர் கைது செய்யப்பட்டனர்.

இரு உள்நாட்டவர்கள் மற்றும் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் ஒரு சிங்கப்பூர் பிரஜை கைது செய்யப்பட்டனர்.

ஜோகூர் போலீஸ் தலைமையகம், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை JSJN மற்றும் தென் ஜோகூர் பாரு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு, அச்சோதனையை மேற்கொண்டனர்.

ஜோகூர் நகரைச் சுற்றி, மருந்து சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு தரை வீடு மற்றும் மூன்று சொகுசு வீடுகளின் ஏழு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக  மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.

“15,333 கிராம் எடையிலான எக்ஸ்டசி, 1,008  கிராம் கெத்தமின், 103.17 கிராம் ஷாபு, 7,800 எக்ஸ்டசி மாத்திரை, 6,250 எரிமின் மாத்திரை மற்றும் 294 கிராம் கஞ்சா,” என்று அவர் கூறினார்.

இன்று ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

சம்பந்தப்பட்ட அம்மோசடிக் கும்பல், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் காபி அல்லது சாக்லேட் வகையிலான பானங்களின் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி, போதைப் பொருளை தந்திரமாக விநியோகித்து அமலாக்கத் தரப்பினரை ஏமாற்றியதுடன், ஒரு பாக்கெட் போதைப் பொருளை 250 ரிங்கிட் வரையில் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Source : Bernama

#JohorBahru
#PDRM
#Drugs
#DrugSmuggling
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews