நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி தொழிலை சீர்ப்படுத்த கேபிகேஎம் இலக்கு

நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி தொழிலை சீர்ப்படுத்த கேபிகேஎம் இலக்கு

கோத்தா கினபாலு, 14/02/2025 : நிலையான, போட்டித்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது போன்ற அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இவ்வாண்டில் நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி தொழிலை சீர்ப்படுத்துவதுவதை விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு கேபிகேஎம்  முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.

உள்நாட்டு அரிசி மற்றும் நெல் விநியோகத்தின் மேம்பாட்டை உறுதி செய்வது மட்டுமின்றி, அத்தொழிலை உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்வதையும் இந்த சீர்த்திருந்தம் நோக்கமாக கொண்டுள்ளதாக கேபிகேஎம் துணை அமைச்சர் டத்தோ அர்துர் ஜோசப் குருப் கூறினார்.

“நெல் நமக்கு அடிப்படை உணவு மட்டுமல்ல, சபா மக்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் நெருக்கமான ஒரு விடயமாகும். இருப்பினும், இன்றைய காலத்தில், குறையான திருப்தியைக் கொண்டிருக்கும் சூழ்நிலையை  எதிர்கொள்கிறோம். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், சபாவில் நெல் மற்றும் அரிசியின் விகிதம் குறைந்து காணப்படுகின்றது,” என்றார் அவர்.

இன்று, சபா, கோத்தா கினபாலுவில் தமது அமைச்சின் பணியாளர்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு கூறினார்.

Source : Bernama

#PaddyProduction
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews