கோலாலம்பூர், 13/02/2025 : வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நெல் கொள்முதலுக்கான அடிப்படை விலை ஒவ்வொரு மெட்ரிக் டன்னுக்கும் 1,300 ரிங்கிட் முதல்1,500 ரிங்கிட் வரை மாற்றியமைக்கப்படும்.
ஊதியச் செலவு அதிகரிப்பு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்களின் விலையேற்றம், சந்தையில் அரிசியின் விலையைப் பாதிக்கும் அதன் உற்பத்தி செலவிற்கான தாக்கத்தை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
அதேவேளையில், உள்நாட்டு வெள்ளை அரிசியின் விலை ஒரு கிலோகிராம் 2 ரிங்கிட் 60 சென் என்று நிலைநிறுத்தப்படும்.
மேலும், ஆறு மாத காலத்திற்கு உற்பத்திச் செலவின் ஒரு பகுதியான 15 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
“சந்தையில் சுமார் இரண்டு கோடியே 40 லட்சம் மதிப்பிலான 10 கிலோகிராம் அளவுடைய உள்நாட்டு வெள்ளை அரிசி கிடைப்பதை இது உறுதி செய்யும். இதன் தொடர்பில், அமலாக்க வழிமுறைகளை கேபிகேஎம் ஆராய்ந்து வருகிறது. விரைவில் விவரங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் இது குறித்து அறிவிக்கப்படும்,” என்றார் அவர்.
நாட்டின் நெல் மற்றும் அரிசி தொழில்துறையின் தற்போதைய நிலைமை குறித்து இன்று மக்களவையில் நடைபெற்ற அமைச்சரின் விளக்கமளிக்கும் அமர்வில் அவர் அவ்வாறு கூறினார்.
தற்போது, ஒரு மெட்ரிக் டன் 2,800 ரிங்கிட்டாக இருக்கும் புதிதாக இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலையை சரிசெய்வதை மறுபரிசீலனை செய்ய, அமைச்சு Padiberas Nasional நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
Source : Bernama
#PaddyProcurementPrice
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews