கோலாலம்பூர், 13/02/2025 : இயற்கை எரிவாயு துறையில் முதலீடுகளை அதிகரிக்க, பொருளாதார அமைச்சு இவ்வாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் இயற்கை எரிவாயு திட்ட வரைபடத்தை வெளியிடும்.
இயற்கை எரிவாயுவின் 5,200 கோடி ரிங்கிட் பங்களிப்பை பொருளாதார வளர்ச்சிக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.
“மலேசியாவில் இயற்கை எரிவாயு துறையை ஓர் இடைநிலை எரிபொருளாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. ஏனெனில் இதை நாம் உண்மையில் முன்னெடுத்துச் சென்று சமநிலைப்படுத்த வேண்டும். நமது புதுப்பிக்கத்தக்க திறனை வளர்ப்பதில் நாம் பின்னோக்கி இருக்க முடியாது. அதேவேளையில், எரிவாயு உள்கட்டமைப்பு மற்றும் சந்தை மேம்பாட்டிற்கு முற்போக்கு சிந்தனை தேவைப்படும் என்பதால், எரிவாயு குறித்த ஒரு சீரற்ற பார்வையையும் முன்னெடுக்க முடியாது,” என்றார் அவர்.
நிதி மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை அணுகுவதில் இத்திட்டம் கவனம் செலுத்தும் என்று ரஃபிசி ரம்லி கூறினார்.
முன்னதாக அவர், இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய எரிவாயு கருத்தரங்கு MyGAS 2025-இல் உரையாற்றினார்.
Source : Bernama
#MyGas2025
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews