புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமும் கையெழுத்திட்டன

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமும் கையெழுத்திட்டன

கோலாலம்பூர், 13/02/2025 : இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமான PRENSA LATINA-வும் இன்று கையெழுத்திட்டன.

உலகலாவிய செய்தி வழங்குநராக, பெர்னாமாவின் பங்களிப்பை இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்துவதுடன்  மலேசியா பற்றிய சரியான மற்றும் அதிகாரப்பூர்வமான செய்திகளை அனைத்துலக மக்கள் அணுகுவதையும் உறுதிசெய்வதாக பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

“மற்ற ஊடகங்களுடன் குறிப்பாக, கியூபாவில் உள்ள பிரென்சா லத்தினா செய்தி நிறுவனத்துடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். மேலும், எங்களின் உள்ளடக்கம் அனைத்துலக அரங்கில் மற்ற நாடுகளைக் கடந்து கியூபா வரை விரிவடைவதற்கான வாய்ப்பாக இதை நான் பார்க்கின்றேன்,” என்றார் அவர்.

பெர்னாமாவைப் பிரதிநிதித்து டத்தின் படுக்கா நூருல் அஃபிடாவும், Prensa Latina-வைப் பிரதிநிதித்து மலேசியாவுக்கான கியூபா தூதர் Florentino Batista Gonzalez இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், கியூபா வெளியுறவு அமைச்சர் Bruno Eduardo Rodriguez Parrilla ஆகியோருடன் மேலும் பலர் கலந்து கொண்டனர்.

Source : Bernama

#BernamaPRENSALATINA
#MalaysiaCuba
#Melaka
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews