நீதிமன்ற குற்றச்சாட்டை மறுத்த ஜி.ஐ.எஸ்.பி.எச் உறுப்பினர்கள்

நீதிமன்ற குற்றச்சாட்டை மறுத்த ஜி.ஐ.எஸ்.பி.எச் உறுப்பினர்கள்

ஷா ஆலம், 12/02/2025 : ஜி.ஐ.எஸ்.பி.எச் (GISBH) குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நசிருடின் முஹமாட் அலி உட்பட அதில் சம்பந்தப்பட்ட 22 நபர்கள், திட்டமிட்ட குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பலில் உறுப்பினராக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

இன்று அவ்வழக்கு, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி டத்தோ ஶ்ரீ லத்திஃபா முஹமாட் தஹார் முன்னிலையில், அக்குற்றச்சாட்டு மீண்டும் தனித்தனியே வாசிக்கப்பட்டபோது, அந்த 22 பேரும் அதனை மறுத்து, விசாரணை கோரினர்.

2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஆண்டும் செப்டம்பர்11-ஆம் தேதி வரையில், சிலாங்கூர், ரவாங்கில் உள்ள ஜி.ஐ.எஸ்.பி.எச் திட்டமிட்ட குற்றவியல் குழுவில் உறுப்பினராக இருந்ததாக அந்த 22 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 130V உட்பிரிவு 1-ரின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அக்குற்றம், 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம், சொஸ்மாவின் கீழ் உள்ளதால், அரசு தரப்பு துணை வழக்கறிஞர் ஷாஃபிக் ஹசிம் ஜாமின் குறித்து எதுவும் பரிந்துரைக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட 21 பேரின் ஜாமீன் விண்ணப்பம் மீதான வாதங்களைச் செவிமடுக்க, வரும் மார்ச் 17-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

Source : Bernama

#GISBH
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews