ஆலய வளாகங்களின் தூய்மையைப் பேணுவதில் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை

ஆலய வளாகங்களின் தூய்மையைப் பேணுவதில் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை

பத்துமலை, 12/02/2025 : கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு பத்துமலை தைப்பூசம் மக்கள் கூட்டத்தில் நேற்று அலைமோதியது.

கொண்டாடத்தின் மறுநாளான இன்று, பத்துமலை திருத்தலத்தின் சுற்றுச்சூழல், தூய்மை மற்றும் துப்புரவு பணிகள் தொடர்பில், பெர்னாமா செய்திகள் கண்ணோட்டம் ஒன்றை மேற்கொண்டது.

அதில், பக்தியை கடந்து ஆலய வளாகங்களின் தூய்மையைப் பேணுவதில் மக்கள் இன்னும் விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஆலய நிர்வாக தரப்பு முன்வைத்துள்ளது.

பக்திக்கு மட்டுமின்றி அதிகமான சுற்றுப்பயணிகளை கவரும் இடமாக பத்துமலைத் திருத்தலம் திகழ்கின்றது.

இத்திருத்தலத்தின் தூய்மையைப் பாதுகாப்பதற்கு ஆலய வளாகங்களைச் சுற்றி பல குப்பைத் தொட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தைப்பூசக் காலக்கட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்னமும் மக்கள் ஆலய வளாகங்களில் குப்பைகளை வீசுவது வருத்தம் அளிப்பதாக ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது, ஆலய வளாகங்களைச் சுற்றிலும் பக்தர்கள் விட்டுச் செல்லும் காலணிகள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர் குறைப்பட்டுக் கொண்டார்.

”அந்தக் குப்பைத் தொட்டி நிறைந்து காணப்பட்டாலும் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் எண்ணம் யாருக்கும் இல்லை. அதே குப்பைத் தொட்டியில்தான் வீசுகின்றனர். அதிகமான காலணிகள் ஆலய வளாகத்திற்கு வெளியே கிடக்கின்றன. அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திரும்பவும் வந்து காலணிகளை எடுக்க முடியாத பக்தர்கள் அவற்றை தங்களது வாகனத்தில் வைத்துவிட்டு வரலாம்,” என்றார் அவர்.

இதனிடையே, குப்பைகளை அகற்றுவதற்கு ஆலய தரப்பு பல குத்தகையாளர்களை நியமித்திருக்கும் வேளையில், அவ்வறை ஆலய வளாகத்தில் இருந்து கொண்டுச் செல்வதற்கு மூன்று நாட்கள் நீடிக்கும் எனவும்சிவகுமார் குறிப்பிட்டார்.

”இந்தக் குப்பைகளை வெளியேக் கொண்டுச் செல்வது சற்று கடினம். போக்குவரத்து நேரிசல் போன்ற காரணங்கள் உள்ளன. மூன்று நாட்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அதனால், பல குத்தகையாளர்களை நியமித்து, குப்பைகளை குவித்து வைக்கும் பணிகளை மேற்கொள்கின்றோம். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு விரைந்து இவ்வேலையை முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது,” என்றார் அவர்.

மற்றொரு நிலவரத்தில், தேவஸ்தான தரப்பு பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், திருட்டுச் சம்பங்கள் உட்பட அசம்பாவிதங்களும் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே நிகழ்ந்துள்ளன.

அதோடு, கூட்ட நெரிசலில், தொலைந்த சிறார்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் இம்முறை குறைந்திருக்கின்றது.

ஒவ்வொரு ஆண்டும், இது குறித்து தேவஸ்தான தரப்பு பல அறிவிப்புகளை செய்த போதிலும், மக்கள் இன்னும் கவனக் குறைவாக இருப்பதாகவும், இன்னும் விழிப்புணர்வு தேவை என்றும் சிவகுமார், பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், பக்தர்கள் பலர், இன்றும் பத்துமலை திருத்தலத்தில் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்திக் கொண்டிருந்தது நமது கண்ணோட்டத்தில் காண முடிந்தது.

அதோடு, சுற்றுப் பயணிகளின் வருகையும் அங்கு காலை பொழுதில் நிறைந்திருந்தது.

இதற்கு மத்தியில், ஆலய வளாகத்தைச் சுற்றிலும் குவிந்து கிடக்கும் காலணிகள், கண்ட இடங்களில் வீசப்பட்டிருக்கும் குப்பைகளும் நமது கவனத்திற்கு வந்தது.

இது தொடர்பாக, அங்கிருந்த பொது மக்களிடம் கருத்துகள் கேட்டறிய முற்பட்டபோது, ஆலய வளாகத்தின் சுற்றுச் சூழல் பாதுக்காப்பை கடைபிடிப்பது அனைவரின் கடமை என்று அவர்கள் தெரிவித்தனர்.

”கண்ட இடங்களில் குப்பைகளை வீசுகின்றனர். காலணிகளையும் எடுத்துச் செல்லாததால் குவிந்துக் கிடக்கின்றது. இதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. வெளிநாட்டினர் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? நமது ஆலய வளாகங்களை நாம்தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்,” என்று மக்கள் கூறினர்.

ஆலய வளாகங்களில் தூய்மையைப் பேணுவதில், மற்ற இனத்தவர்களுக்கும் வெளிநாட்டினர்களுக்கும் இந்திய சமுதாயம் ஓர் எடுத்தக்காட்ட இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

Source : Bernama

#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews