கோலாலம்பூர், 12/02/2025 : 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை, மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம்-இல் 9,550 பெண்கள் பணியாற்றுகின்றனர்.
இதில் 6,574 உறுப்பினர்கள் தரைப் படையிலும், 1,953 பேர் கடற்படையிலும், 1,023 பேர் ஆகாயப்படையிலும் பணியாற்றுகின்றனர்.
தற்காப்பு அமைச்சின் வெள்ளை அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட 10 விழுக்காடு இலக்கை விட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் இரண்டு விழுக்காடு குறைவாக உள்ளதை இது காட்டுவதாக, தற்காப்பு துணை அமைச்சர் அட்லி சஹாரி தெரிவித்தார்.
ஏ.டி.எம்-இல் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் முயற்சியாக அந்த வெள்ளை அறிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அவர் கூறினார்.
அனைத்துலக அளவில் மனிதாபிமான மற்றும் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்க 222 பெண் ராணுவ வீரர்களையும் ஏ.டி.எம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இதுவரை, அனைத்துலக அளவில் 118 பெண் ராணுவ வீரர்களின் ஈடுபாட்டுடன் ஏ.டி.எம் 3 மனிதாபிமான பணிகளை மேற்கொண்டுள்ளது. வங்காளதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக அனுப்பப்பட்ட 245 மொத்த பணியாளர்களில் 36% பேர் அல்லது 89 பேர் பெண்கள். துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 21 பெண்கள். (மொத்த பணியாளர்கள் 110 பேரில் 19% பெண்கள்). காயமடைந்த பாலஸ்தீனியர்களை சிகிச்சைக்காக மலேசியாவுக்கு அழைத்து வரும் பணியில் 8 பெண் பணியாளர்கள். மொத்த பணியாளர்கள் 70 பேரில் 11% பெண்கள்,” என்று அட்லி தெரிவித்தார்.
ஏ.டி.எம்-இல் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை குறித்து கெப்பாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மஸ்துரா முஹமாட் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அட்லி சஹாரி அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#WomenInMalaysianArmy
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews