தம்போய், 11/02/2025 : ஜோகூர் தம்போயில் உள்ள ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூசக் கொண்டாட்டம் களைக்கட்டியது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் அல்லது பால்குடங்கள் ஏந்தி நேர்த்தி கடன்களைச் செலுத்தினர்.
இவ்விழாவை மேலும் மெருகூட்டும் வகையில் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கலந்து கொண்டார்.
இம்முறை ஏறக்குறைய 400 பால்குடங்கள் 20 முதல் 25 வரையிலான காவடிகள் எடுக்கப்பட்டதாக ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் துணைத் தலைவர் ஓய்வுபெற்ற சார்ஜன் மேஜர் எஸ். ரவிதாஸ் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
” மெரினை ஒட்டியுள்ள டங்கெ ஆற்றிருந்து ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் வரையில் பக்தர்கள் பால்குடம் ஏந்திச் சென்றனர். ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தமது குடும்பத்தாருடன் கலந்து கொண்டது இவ்விழாவை மேலும் மகிழ்ச்சிப்படுத்தியது,” என்று அவர் கூறினார்.
சிறிய ஆலயமாக இருந்தாலும், சுற்றுப்புறத்திலுள்ள பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வதற்கும் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்கும் எவ்விதத்திலும் அது தடையாக இல்லை என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Source : Bernama
#Thaipusam
#Johor
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews