ஷா ஆலம், 11/02/2025 : மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூர் ஷா ஆலம், ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்திலும் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட்டது.
400-க்கும் அதிகமான பக்தர்கள் பால் குடம் ஏந்தி பக்தியுடன் மிகவும் நேர்த்தியான முறையில் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
1914-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்வாலயத்தின் இவ்வாண்டு தைப்பூசத்தில் சுமார் 5,000 இந்துக்கள் கலந்து கொண்டதாக அதன் தலைவர் டத்தோ என்.எஸ் கிருஷ்ணன் தெரிவித்தார்.
பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பந்தலிட்டு ஆலயத்திற்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கினர்.
Source : Bernama
#Thaipusam
#ShahAlam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews