எல்லைத் தாண்டிய & இணைய குற்றச்செயல்கள் மீது உள்துறை அமைச்சு கவனம்

எல்லைத் தாண்டிய & இணைய குற்றச்செயல்கள் மீது உள்துறை அமைச்சு கவனம்

புத்ராஜெயா, 10/02/2025 : 2025 ஆசியானுக்கு தலைமையேற்கும் காலக்கட்டம் முழுவதிலும், எல்லைத் தாண்டிய குற்றச்செயல்கள் உட்பட இணைய குற்றச்செயல்களுக்கு உள்துறை அமைச்சு கவனம் செலுத்துகிறது.

அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சுகள் நிலையில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும், வழிகாட்டியாக இருக்கும் 10 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பாதுகாப்புக் குழுவில் தமது அமைச்சு ஈடுபடும் என்று, அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

உளவுத்துறை தகவல் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் கூட்டுச் சோதனை நடவடிக்கைகள் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய எல்லைத் தாண்டிய குற்றங்களில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் விவரித்தார்.

“எல்லை தாண்டிய குற்றங்கள் பற்றி பேசும்போது, நாங்கள் உண்மையை ஒப்புக்கொள்கிறோம். நாம் அல்லது எந்த ஓர் ஆசியான் நாடும் தனித்து அதைத் தீர்க்க முடியாது. ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறோம். பல வடிவங்களில் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் மிக முக்கியமானவை அம்மூன்று அம்சங்கள் ஆகும்,” என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற உள்துறை அமைச்சின் பிப்ரவரி மாதக் கூட்டத்தில் கலந்துகொண்டப் பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

Souce : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews