கோலாலம்பூர், 10/02/2025 : சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் 2025 தைப்பூசத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 09/02/2025 அன்று இரவு தைப்பூச தண்ணீர் பந்தல் ஒன்றை ஜலான் ஈப்போவில் உள்ள முத்தையரா காம்ப்லெக்ஸ் அருகில் அமைத்து இருந்தனர். இந்த தண்ணீர் பந்தலில் தண்ணீர், மூலிகை பானம் மற்றும் வேகவைத்த கடலை ஆகியவை பத்து மலை நோக்கி பயணித்த முருகப் பெருமானின் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா அமைப்பினர் சாய் பாபவிற்கு பூஜை செய்து இந்த தண்ணீர் பந்தல் கொடையை துவங்கினர். இந்த தைப்பூச தண்ணீர் பந்தல் சேவை சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா அமைப்பினர் முதல் முறையாக ஏற்பாடு செய்திருப்பதாகவும், இது அடுத்து வரும் வருடங்களில் தொடரும் என்றும் அமைப்பினர் தெரிவித்தனர். சிறிய அளவிற்கு திட்டமிட்ட இந்த தைப்பூச தண்ணீர் பந்தல் பெரிய அளவிற்கு சுமார் 8000 முதல் 10000 பக்தர்களுக்கு தங்கள் சேவையை வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கத்தின் தலைவர் திருமதி. சாய் தெரசா மோகன் அவர்கள் கூறுகையில் பாபாவின் அருளால் சிறிய அளவில் திட்டமிட்ட இந்த தைப்பூச தண்ணீர் பந்தல் மிகப் பெரிய அளவில் நடைபெற்றதாகவும் இந்த தைப்பூச தண்ணீர் பந்தல் அடுத்தடுத்த வருடங்களில் தொடரும் என்றும் தெரிவித்தார். 2017 துவங்கிய சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் பல்வேறு சேவைகளை மலேசியாவில் செய்து வருகிறது என்றும் இந்தியாவில் சீரடியிலும் அவர்கள் பல்வேறு சேவைகலை செய்து வருவதாகவும் திருமதி சாய் தெரசா மோகன் என் தமிழ் ஊடகத்திடம் தெரிவித்தார். பாபாவின் கூற்றுப்படி தானத்தில் சிறந்த தானமான அன்னதானமான வழங்குவதாக அவர் கூறினார். பாபாவை நெருங்க அவர் சொல்படி அனைவரிடமும் அன்பாகவும் இரக்க குணத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். துவாரகமாயில் செய்த கச்சா மற்றும் மூலிகை நீரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தண்ணீர் பந்தல் சேவையில் சீரடியில் இருந்து வந்திருந்த சாய் பக்தர் ஒருவரும் கலந்து கொண்டு சேவை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தைபூச தருணத்தில் பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து சேவை புரிந்த சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கத்தினருக்கு என் தமிழ் ஊடகம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
Souce : Entamizh News Team
#PersatuanSaiRamSaiBabaDwarakamaiMalaysia
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia