க்ளீன் தைப்பூசம் இயக்கத்தினரை நேரில் வாழ்த்தினார் டத்தோ N. சிவக்குமார்

க்ளீன் தைப்பூசம் இயக்கத்தினரை நேரில் வாழ்த்தினார் டத்தோ N. சிவக்குமார்

பத்து மலை, 09/02/2025 : பத்து மலை உட்பட நாட்டில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் ஐந்து திருத்தலங்களில் க்ளீன் தைப்பூசம் இயக்கத்தினர் சுத்தம் செய்யும் சேவையை செய்து வருகின்றனர். பிப்ரவரி 08ஆம் தேதி துவங்கி 11 ஆம் தேதி வரை இந்த சுத்தம் செய்ய்ம் சேவையை க்ளீன் தைப்பூசம் இயக்கத்தினர் செய்ய இருக்கிறார்கள்.

க்ளீன் தைப்பூசம் இயக்கத்தினர் மற்றும் தன்னார்வலர்களின் இந்த அறப் பணியை மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தை சேர்ந்த டத்தோ N. சிவக்குமார் அவர்கள் 09/02/2025 நேரில் சந்தித்து பாராட்டினார். க்ளீன் தைப்பூசம் இயக்கத்தினருக்கு தேவையான உதவிகளை டத்தோ சினக்குமார் செய்து கொத்திருக்கிறார். அவர்களின் இந்த சேவையால் ஏற்பட்டுள்ள பயன்கள் குறித்து பாராட்டி பேசினார் டத்தோ N.சிவக்குமார். மேலும் சேவையாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு அங்கீகாரமும் செய்தார்.

Souce : Entamizh News Team

#DSK
#CleanThaipusam
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia