சுங்கை பூலோ, 09/02/2025 : 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம், சொஸ்மா-வின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், , சிலாங்கூர், சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு முன்புறத்தில், நேற்று காலை நடத்திய கூட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில், போலீசார் விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளனர்.
சிறுவர்கள் உட்பட சுமார் 40 முதல் 50 பேர் வரையில் பதாதைகளை ஏந்தியவாறு அங்கு ஒன்று கூடியதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன் முஹமட் ஹாஃபிஸ் முஹமட் நோர் தெரிவித்தார்.
சொஸ்மா சட்டத்தை அரசாங்கம் அகற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே கைதிகளின் குடும்பத்தினர் அங்குத் திரண்டது, தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இவ்வேளையில் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரணியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
இவ்விவகாரத்தைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டம் செக்ஷன் 9 உட்பிரிவு ஐந்தின் கீழ், போலீஸ் ஒரு விசாரணை அறிக்கையைத் திறந்ததுடன், மிக விரைவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சாட்சியப் பதிவிற்காக நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் முஹமட் ஹாஃபிஸ் கூறினார்.
இதனிடையே, பேரணியை நடத்துவதற்கான அறிவிக்கையைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் போலீசாரிடம் சமர்ப்பிக்காவிட்டால் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.
Source : Bernama
#PDRM
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.