குடிநுழைவுத்துறை துணை அமலாக்க அதிகாரியின் குற்றஞ்சாட்டை தனியார் துறை ஊழியர் ஒப்புக்கொண்டார்

குடிநுழைவுத்துறை துணை அமலாக்க அதிகாரியின் குற்றஞ்சாட்டை தனியார் துறை ஊழியர் ஒப்புக்கொண்டார்

அலோர் ஸ்டார், 09 பிப்ரவரி (பெர்னாமா) – கடந்தாண்டில் குடிநுழைவுத்துறை துணை அமலாக்க அதிகாரி ஒருவருக்கு 5,000 ரிங்கிட் கையூட்டு வழங்க முன்வந்த குற்றச்சாட்டை, தனியார் துறை ஊழியர் ஒருவர் இன்று கெடா, அலோர் ஸ்டாரில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர்மீதான குற்றச்சாட்டை நீதிபதி என்,பிரிசில்லா ஹேமாமாலினி முன்னிலையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் வாசித்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட தியோ வெய் சின்  அந்த வாக்குமூலத்தை அளித்தார்.

மலேசிய குடியேற்றச் சுற்றறிக்கைக்கு ஏற்ப சுற்றுப்பயணிக்கான விதிமுறையைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரை மலேசியாவிற்குள் நுழைய அனுமதிப்பதற்காக சம்பந்தப்பட்ட குடிநுழைவுத்துறை துணை அமலாக்க அதிகாரிக்கு 5,000 ரிங்கிட் கையூட்டு வழங்க முன்வந்ததாக தியோ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS-இல் மாலை 6.30 மணிக்கு அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 214-இன் கீழ் தியோ மீது குற்றச்சாட்டப்பட்டது.

எனினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான தண்டனை மார்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Source : Bernama

#AlorSetar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.