வெள்ளத்தில் சேதமடைந்த சபா, சரவாக் பள்ளிகள்; மறுசீரமைக்கும் செலவு மிகப்பெரியத் தொகையாக இருக்கலாம்
நிபோங் திபால், 08/02/2025 : சபா மற்றும் சரவாக்கில் வெள்ளத்தில் சேதமடைந்த பள்ளிகள் மற்றும் வளாகங்களை மறுசீரமைக்கும் செலவு மிகப்பெரியத் தொகையை உள்ளடக்கி இருக்கும் என்று கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.
இம்முறை வெள்ளத்தில், அதிகமான பள்ளிகளும் கல்வி அமைச்சின் வளாகங்களும் சேதமடைந்திருப்பது, சம்பந்தப்பட்ட அமைச்சின் தொடக்கக்கட்ட கண்காணிப்பு அடிப்படையில் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து இந்த கணிப்பு பெறப்பட்டதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
”செலவு மிகவும் அதிகமாக உள்ளது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மோசமான வெள்ளத்தில் சம்பந்தப்பட்ட வளாகங்கள் அதிகம் என்பது தொடக்கக்கட்ட கண்காணிப்பின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இதனால், இம்முறை தயார்நிலை மிகவும் அவசியம். இதற்கு காரணம், பள்ளி தவணை தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ளது.” என்றார் அவர்.
இன்று, நிபோங் திபால் நாடாளுமன்ற சேவை மையத்தில், Ceria Ke Sekolah Tenaga Nasional Berhad திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
Source : Bernama
#Sabah
#Sarawak
#Floods
#Banjir
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia