PLKN 3.0-இல் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களின் வருகையை ஒத்தி வைக்க விண்ணப்பிக்கலாம்

PLKN 3.0-இல் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களின் வருகையை ஒத்தி வைக்க விண்ணப்பிக்கலாம்

சுங்கை பீசி, 08/02/2025 : PLKN 3.0 எனும் மூன்றாவது தேசிய சேவை பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை அதில் கலந்து கொள்ள முடியாத நிலையில் தங்களின் வருகையை ஒத்தி வைப்பதற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதைத் தவிர்த்து வேலையில் சேர்ந்தவர்கள், அப்பணியிலிருந்து வெளியேற முதலாளிகளிடம் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்று தேசிய சேவை பயிற்சி துறை, JLKN தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் டத்தோ யாக்கோப் சமிரான் தெரிவித்தார்.

”இந்த வருங்கால பயிற்சியாளர்களுக்கு திட்டத்தில் பங்கேற்க ஏன் அனுமதி வழங்கவில்லை என்பதற்கு அவர்களின் முதலாளிகள் நியாயமான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால், தேசிய சேவை பயிற்சி சட்டத்திற்கு அவர்களும் கட்டுப்பட்டு நடக்கும் பொறுப்பினைக் கொண்டிருக்க வேண்டும்.  எனவே முதலாளிகள் இத்திட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என்றால், மற்றொரு செயல்முறை செயல்படுத்தப்படும்,” என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் உள்ள அரச மலாய் இராணுவப் படைப்பிரிவின் முதல் Batalion-னின் எல்லைப் பகுதியான பெர்டானா சுங்கை பீசி முகாமில், PLKN 3.0 2025 சுடும் பயிற்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ யாக்கோப் அவ்வாறு கூறினார்.

இம்முறை இதில் கலந்து கொள்ள முடியாதவர்கள், இரண்டாவது அல்லது அடுத்தடுத்த தவணைகளுக்கான ஒத்திவைப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஏனெனில், தேர்ந்தெடுக்கப்படுவர்கள் இப்பயிற்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் டத்தோ யாக்கோப் சமிரான் கூறினார்

Source : Bernama

#PLKN
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia