கோலாலம்பூர், 08/02/2025 : நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான டத்தோ கீதாஞ்சலி G அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிக்பீல்டில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்பு யாகமும் பிரார்த்தனையும் இன்று 08/02/2025 நடைபெற்றது.இந்த பூஜையில் டத்தோ கீதாஞ்சலி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெற்றார்.
கலைத்துறையில் சுமார் 35 வருட காலம் பணியாற்றி வரும் கீதாஞ்சலி அவர்கள் தனது இந்த கலை பயணத்தில் பல்வேறு பரிமாணங்களில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். அவர் பயோடெக் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதுடன் பல சமூக சேவை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது கலைப்பயணம் மற்றும் அவரது தொழில்துறையிலும் மேலும் பல்வேறு சாதனைகள் புரிய இந்த பிறந்தநாளில் என் தமிழ் ஊடகம் வாழ்த்தி மகிழ்கிறது.
Source : Entamizh News Division
#DatoGeethanjaliG
#BirthdayPrayers
#KrishnarTemple
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.