கோலாலம்பூர், 08/02/2025 : கூட்டரசு பிரதேச ம.இ.கா மற்றும் மாஜூ கல்வி மேம்பாட்டு கழகம் இணைந்து இன்று 08/02/2025 பிற்பகல் கோலாலம்பூரில் ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் “மீண்டும் பள்ளிக்கு போகலாம்” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான Dr. M. சரவணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்கும் விதத்தில் இந்த “மீண்டும் பள்ளிக்கு போகலாம்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. கூட்டரசு பிரதேசத்தை சேர்ந்த சுமார் 300 மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் புத்தகப் பை மற்றும் பள்ளிச் சீருடை வாங்க ரிம 100க்கான பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டது. மாணவர்கள் கம்டார் ஸ்டோர்ஸில் இந்த கூப்பன்களை பயன்படுத்தி பள்ளிச் சீருடைகளை வாங்கிப் பயன் பெறலாம். குறிப்பாக ம.இ.கா உறுப்பினர்களுக்காக இந்த மீண்டும் பள்ளிக்கு போகலாம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
Source : Entamizh News Division
#BackToSchool
#MIC
#MIED
#DatukSeriMSaravanan
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.