பத்து மலை, 07/02/2025 : மாண்புமிகு பிரதமர் தன் ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்கள் இன்று 07/02/2025 பிற்பகல் பத்து மலை கோவில் வளாகத்திற்கு இந்துமத விழாவான தைப்பூச ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டு வருகை புரிந்தார்.
எதிர்வருகின்ற செவ்வாய்கிழமை இந்துக்கள் தைப்பூசத்தை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மேற்பார்வையிட பிரதமர் இந்த வருகை புரிந்ததாக தெரிவித்தார்.
இந்த வருகை ஒரு சம்பிரதாயமாக இல்லாமல் மலேசியா பலதரப்பட்ட கலாச்சாரம் மற்றும் மதங்கள் ஒன்றாக ஒற்றுமையாக இணக்கமாக இருக்கும் ஒரு நாடு என்பதை வலியுறுத்த மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டின் பலம் என்வும் பிரதமர் அப்போது கூறினார். பன்முகத்தன்மையே நமது பலம் என்பதை உணர்ந்து அறிவார்ந்த நாட்டுப்பற்று மிக்க குடிமக்களாக நாம் பிரிவினையை தூண்டும் சக்திகளிடம் இருந்து ஒதுங்கி நம்மிடையே இருக்கும் இணக்கத்தை பேணிக் காக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து இந்துக்களுக்கும் தனது தைப்பூச நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அல்லோதோரின் இறப்பு மற்றும் அனைத்து மத சடங்குகளில் கலந்துகொள்வது குறித்து புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை என்றும் இதே கருத்தை தனது அமைச்சரவை முடிவாக சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தெரிவிக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார்.
Source : Entamizh News Division
#PMAnwar
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia