பெட்டலிங் ஜெயா, 07/02/2025 : சுகம் கர்நாடிகா இந்தியாவில் உள்ள பாடறிவோம் படிப்பறிவோம் நிறுவனத்துடன் சேர்ந்து “சுகம் சூப்பர் சிங்கர்” என்ற பாடல் திறன் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். சுகம் சூப்பர் சிங்கர் 8 வது சீசன் போட்டியின் அறிமுக விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 07/02/2025 அன்று சுகம் கர்நாடிகா அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முறை சுகம் சூப்பர் சிங்கர் போட்டியை சுகம் கர்நாடிகா பாடறிவோம் படிப்பறிவோம் நிறுவனத்துடன் இணைந்து நடத்த இருக்கிறார்கள். இதன் அறிமுக விழாவும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வும் 07/02/2025 அன்று சுகம் கர்நாடிகா அலுவலகத்தில் நடைபெற்றது. பாடறிவோம் படிப்பறிவோம் நிறுவனம் குறித்த அறிமுகத்தை அந்த நிறுவனத்தார் விளக்கினர். சுகம் சூப்பர் சிங்கர் போட்டியின் விதிமுறைகள், சுற்றுக்கள், பிரிவுகள் குறித்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவரிக்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அல்லது விவரம் வேண்டுபவர்கள் கீழுள்ள தொலைபேசி அல்லது ஈமெயிலில் ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
+60 3-7772 6555
enquiry@sugamkarnatica.org
Source : Entamizh News Division
#SugamSuperSinger
#SugamKarnatica
#PaadarivomPadipparivom
#SingingCompetition
#PressMeet
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia