கோலாலம்பூர், 07/02/2025 : பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாட்டப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு இரத ஊர்வலத்திற்கு வழி விடும் வகையில் தலைநகரைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட சாலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி கட்டம் கட்டமாக மூடப்படும்.
ஜாலான் துன் எச்.எஸ் லீயில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்படும் வெள்ளி இரதம்
பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தைச் சென்று சேர்வதற்காக, இரவு மணி 9 தொடங்கி அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
ஜாலான் துன் எச்.எஸ் லீ, ஜாலான் சுல்தான், ஜாலான் துன் டான் செங் லோக், ஜாலான் புடூ, ஜாலான் துன் பேராக், ஜாலான் லெபோ அம்பாங், ஜாலான் அம்பாங், ஜாலான் முன்ஷி அப்துல்லா மற்றும் ஜாலான் டாங் வங்கி போன்ற சாலைகள் இதில் உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில்
டத்தோ ருஸ்டி முஹமட் இசா குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, ஜாலான் ராஜா லாவூட், ஜாலான் பெலியா, ஜாலான் ஶ்ரீ அமார், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, ஜாலான் துன் ரசாக், ஜாலான் பெர்ஹெந்தியான், ஜாலான் ஈப்போ லாமா மற்றும் ஜாலான் கெப்போங் பாரு ஆகிய சாலைகளும் கட்டம் கட்டம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறிப்பாக சாலையைப் பயன்படுத்துவோர், தங்கள் பயணத்தை நன்கு திட்டமிட்டுகொள்வதோடு, மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.
Source : Bernama
#Thaipusam
#Thaipusam2025
#RoadBlocks
#BatuCaves
#ThaipusamInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.