பத்துமலை, 07/02/2025 : மாண்புமிகு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலை கோவிலுக்கு தைப்பூச ஏற்பாட்டை பார்வையிட வருகை புரிந்தார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் இன்றைய வருகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மடானி அரசாங்கத்தின் வழி தாம் கொண்டுள்ள உறுதிபாட்டை புலப்படுத்துகிறது.
இந்த வருகையின் போது, அன்வார் இப்ராஹிம் மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, தேவஸ்தான முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களோடு கலந்துரையாடினார்.
தேவஸ்தான செயலவையினர் முன் வைத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு, சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து உதவும் என பிரதமர் உத்தரவாதம் அளித்தார். ஆலயம் சமூக சேவை மையமாகச் செயல்பட புதிய மண்டபம் கட்டுவதற்கு வசதிகள் செய்து தரப்படும் எனவும் பிரதமர் கூறினார்.
#PMAnwar
#BatuCaves
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.