கோலாலம்பூர், 06/02/2025 : நான்காவது ஒழுங்குமுறைக்கான ஊக்கத்தொகை அடிப்படையிலான கண்காணிப்பு வழிமுறையின் கீழ், புதிய கட்டண அட்டவணை உட்பட, தீபகற்ப மலேசியாவில் மின்சார கட்டணங்களை நிர்ணயிப்பதில் மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு கருத்தில் கொள்ளப்படும்.
பிரதமர் வலியுறுத்தியதற்கு ஏற்ப, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் எந்தவொரு விலை ஏற்றமும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்
அதன் தொடர்பில், ஜனவரி 13-ஆம் தேதியும் நேற்றும், அத்தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வணிக சமூகத்துடன் இணைந்து, எரிசக்தி ஆணையத்தின் வழி எரிசக்தி மாற்ற மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு, பெட்ரா சந்திப்பு நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.
“அந்த மாற்றத்திற்கு அனைத்து பயனீட்டாளர்களும் குறிப்பாக தொழில்துறை தரப்பு தயார்நிலையில் இருப்பதற்கும், வருங்காலத்தில் மின்சாரத்தை விவேகமாக பயன்படுத்தவும், புதிய கட்டண அட்டவணையை நிர்ணயிப்பதில் வழங்கப்பட்ட கருத்துக்களை அமைச்சு ஆராயும்,“ என்றார் அவர்.
அருகிலுள்ள அண்டை நாடு எதிர்மாறான திட்டங்களைக் கொண்டிருந்தாலும், மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கான தெனாகா நேஷனல் நிறுவனத்தின் நோக்கம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஃபடில்லா அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#FadillahYusof
#ElectricityCharges
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.