தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும்

தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும்

புத்ராஜெயா, 06/02/2025 :   திருத்தம் செய்யப்பட்ட 2010-ஆம் ஆண்டு தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம், சட்டம் 711, வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

எனினும் அது, சம்பந்தப்பட்ட சட்டத் திருத்தம் தொடர்பான அரசாங்க முடிவைப் பொருத்தது.

“எனவே, பொது சேவை துறையில் சிறந்த நிர்வாக அமலாக்கத்தை முடிந்தவரை உறுதிசெய்ய அரசாங்கத்தின் உறுதிப்பாடாகவும், என்.ஏ.சி.எஸ்-இன் தலைவராக எஸ்.பி.ஆர்.எம்-இன் உறுதிப்பாடாகவும் நான் இதை கூற முடியும். மேலும், 2028ஆம் ஆண்டில் என்.ஏ.சி.எஸ் நிறைவடைவதற்கு முன்னர் விரைவில் மக்களுக்கு விரையில் அமல்படுத்த முடியும்”, என்று அவர் கூறினார்.

ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் இச்சட்ட மசோதா இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அசாம் பாக்கி தெரிவித்தார்.

மேலும், அரசியல் பங்களிப்பு சட்டமசோதாவும் அடுத்த ஆண்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Source : Bernama

#AzamBaki
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.