குளுவாங், 06/02/2025 : இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய அளவில் ஒற்றை அமர்வு பள்ளி முறையை அமல்படுத்த கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.
இதுவரை, நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், ஒற்றை அமர்வு முறையை செயல்படுத்தி உள்ளதாக கல்வி அமைச்சர், ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
இருப்பினும், அதிகமான மாணவர் எண்ணிக்கையின் காரணத்தினால், எஞ்சிய பள்ளிகளில் அம்முறை அமல்படுத்தப்படவில்லை.
”ஆனால், பல காரணங்களை கருத்தில் கொள்கிறோம். பள்ளி வளாகம் அமைந்திருக்கும் இடம் மற்றும் பிற நிர்வாக விவகாரங்களை கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ஆனால், பள்ளி ஒரே அமர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்,” என்றார் அவர்.
இன்று, ஜோகூர் குளுவாங்கில் நடைபெற்ற ‘INTAN Minister’s Conversation’, ஐ.எம்.சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்லினா அவ்வாறு கூறினார்.
Source : Bernama
#FadhlinaSidek
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia