OPS SKY; ஊழல் & கள்ளப்பண பரிமாற்ற வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதற்கான நடவடிக்கை

OPS SKY; ஊழல் & கள்ளப்பண பரிமாற்ற வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதற்கான நடவடிக்கை

புத்ராஜெயா, 06/02/2025 :   நிதி ஆலோசனை நிறுவனம் சம்பந்தப்பட்ட Ops Sky மூலம் ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதற்காக, வியாழக்கிழமை மூன்று பிரபலங்கள் எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர்.

பெறப்பட்ட கட்டணத் தொகையை ஆராய்வது உட்பட விசாரணையின் பல்வேறு அம்சங்களை அடையாளம் காண, பாடகர் உட்பட மூன்று பிரபலங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதை எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர், டான் ஶ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

அரசு ஊழியர்கள் உட்பட கடன் வாங்குபவர்களை ஏமாற்றுவதற்காக கடன் திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் பிரபலங்களைப் பயன்படுத்துவதற்கான வழிமுறையைக் கண்டறிய அந்த மூன்று நபர்களிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அசாம் பாக்கி தெரிவித்தார்.

“அதனால், எனக்கு, அவர்கள் எவ்வளவு தொகையை வாங்குகிறார்கள் என்பது முக்கியமில்லை. இருப்பினும், கேள்விக்குரிய பிரபலங்களுக்குப் பணம் செலுத்த இவ்வளவு முதலீடு செய்யப்படுகிறதா என்பதையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம். இது எங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும்”, என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒரு கோடியே 80 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கணக்குகளை எஸ்.பி.ஆர்.எம் முடக்கியிருந்தாலும், அந்த மூன்று பிரபலங்களின் வங்கி கணக்குகள் அதில் உட்படுத்தப்படவில்லை என்றும் அசாம் பாக்கி குறிப்பிட்டார்.

Source : Bernama

#OPSSKY
#TanSriAzamBaki
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.