இஸ்லாம் அல்லாதவர்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கான வழிகாட்டிகள் நாளை விவாதிக்கப்படும் -பிரதமர்

இஸ்லாம் அல்லாதவர்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கான வழிகாட்டிகள் நாளை விவாதிக்கப்படும் -பிரதமர்

கோலாலம்பூர், 06/02/2025 : இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாக்களில், இஸ்லாமியர்கள் கலந்து கொள்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டிகள் குறித்து, நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இன்று புத்ராஜெயாவில், அந்த பரிந்துரை குறித்து வினவப்பட்டபோது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சுருக்கமாக இவ்வாறு பதிலளித்தார்.

“டத்தோ ஶ்ரீ நயிம் அந்த வழிகாட்டியை தெரிவித்தார். அது குறித்து, நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம்,” என்றார் அவர்.

இஸ்லாம் அல்லாதவர்களின் கொண்டாட்டங்கள் மற்றும் இறப்புகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்வது உட்பட வழிபாட்டு தலங்களுக்குச் செல்வதும், விழாக்களை ஏற்பாடு செய்வதும் குறித்த புதிய வழிகாட்டியை பரிசீலித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

நாட்டில் வாழும் பல மதங்களைச் சேர்ந்த பல்லின சமூகத்தினரிடையே இணக்கமான சமூக மற்றும் கலாச்சார உறவுகளை ஊக்குவிக்கும் விதமாக அந்த வழிகாட்டிகள் உருவாக்கப்படுவதாக, மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முஹமட் நயிம் மொக்தார் கூறியிருந்தார்.

Source : Bernama

#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.