புத்ராஜெயா, 06/02/2025 : ஊழலுடன் தொடர்புடைய 40 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தை கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் வழங்கிய விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
அந்த ஆவணங்கள், குற்றவியல் பிரச்சனைகள் அல்லது நிர்வாக முறைகேடுகளின் சாத்தியக் கூறைத் தீர்மானிக்கும் என்றும், தமது தரப்பு இன்னும் விசாரணை அறிக்கை எதுவும் திறக்கவில்லை என்றும் எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர், டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
”ஆகவே, டத்தோ ஸ்ரீ மைமுனா (டிபிகேஎல் டத்தோ பண்டார்) வழங்கிய சிறந்த ஒத்துழைப்பின் அடிப்படையில், அவர்கள் ஏற்கனவே எங்களுக்கு ஆவணங்களை வழங்கிவிட்டனர். மேலும், அந்த ஆவணங்கள் நிச்சயமாக கூட்டப் பதிவுகளுடன் தொடர்புடையவை மற்றும் இதர சிலவற்றை உள்ளடக்கியது. இரண்டு விவகாரங்களை மட்டும் பார்க்கவே, எஸ்பிஆர்எம் தகவல்களை ஆய்வு செய்து வருகிறது,” என்றார் அவர்.
பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக கூறிய அசாம் பாக்கி, வரும் திங்கட்கிழமைக்குள் அதன் அண்மைய நிலவரத்தை தமது தரப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.
அவ்விவகாரம் தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்கு எஸ்.பி.ஆர்.எம் எந்த தனிநபர்களையும் அழைக்கவில்லை.
அதோடு, டி.பி.கே.எல்-க்கு உள் விசாரணையை மேற்கொள்ள, எஸ்.பி.ஆர்.எம் தரப்பு அவகாசம் அளித்துள்ளதாகவும் அசாம் பாக்கி குறிப்பிட்டார்.
Source : Bernama
#TanSriAzamBaki
#SPRM
#DBKL
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.