புத்ராஜெயா, 05/01/2025 : மக்களுக்கு வழங்கப்படும் சேவை சுமூகமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், அரசாங்க முகப்புகளில் பணி சுழற்சி முறையை, பொது சேவை துறை, JPA கட்டம் கட்டமாக அமல்படுத்தும்.
இந்தப் பணி சுழற்சி முறை, முகப்புகளில் பணிபுரிய புதிய அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் அதேவேளையில், அவர்கள் தங்கள் பொறுப்புகளை ஏற்கும் முன்னர் போதுமான பயிற்சி பெறுவதையும் உறுதி செய்யும் என்று, பொது சேவை தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ வான் அஹ்மாட் டஹ்லான் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
எல்லா அதிகாரிகளும் நேரடியாக மாற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அனைவரையும் மாற்றினால், முகப்புகளில் உள்ள சேவை தொடர்பான விவகாரங்களும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நான் அஞ்சுகிறேன். எனவே சிலரை முதலில் மாற்றுவோம். நீண்ட காலமாக இருந்தவர்களை முதலில் அங்கே வைத்திருப்போம். பின்னர், இரண்டாம் கட்டமாக அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவோம் என்றார் அவர்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அத்தகவல்களை வழங்கினார்.
புதிய அதிகாரிகளுக்கு தேவையான ஈடுபாடு மற்றும் புரிதலை வழங்குவது உட்பட, தங்கள் கடமைகளை திறம்பட செய்ய ஆறு மாத கால அவகாசம் பொருத்தமானதாகக் கருதப்படுவதாக அவர் கூறினார்.
Source : Bernama
#KPPA
#WanAhmadDahlanAbdulAziz
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.